எதிர்வரும் ஜூலை மாதம் முதல் சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை விமான நிலையங்கள் மீளத்திறக்கப்படுவது குறித்து ஜேர்மன் மற்றும் இந்திய நாடுகளின் சுற்றுலாத்துறை முகவர்கள் தொடர்ச்சியாக அக்கறை காண்பித்து வருவதாகவும் கிமாலி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.