மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 ஏப்பிறல்

- Advertisement -

இலங்கையின் தயாரிப்புத் துறையில் கொவிட் – 19 இனால் தூண்டப்பட்ட வீழ்ச்சியானது தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அளவீட்டின் தொடக்க காலத்திலிருந்து நோக்குகையில் மிகக் குறைந்த மட்டத்தினை அடைந்து, முன்னைய மாதத்திலிருந்து 5.8 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியொன்றுடன் 24.2 சுட்டெண் பெறுமதியில் பதிவாகிய மேலும் சுருக்கத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு ஏப்பிறல் காலப்பகுதியில் தீவிரமடைந்தது. சுட்டெண்ணின் இவ்வீழ்ச்சியானது ஒருபோதும் இல்லாத வீதங்களில் வீழ்ச்சியடைந்த புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் தொழில்நிலை மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது.

வைரஸ் பரவலினை மட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு மூலம் அநேகமாக அனைத்துத் தயாரிப்பு நிறுவனங்களும் 2020 ஏப்பிறல் மாத காலப்பகுதியின் போது ஒன்றில் மூடப்பட்டிருந்தன அல்லது அதன் வழமையான கொள்ளளவின் ஒரு பகுதி தொழிற்படுத்தப்பட்டது. அதற்கமைய புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்கள் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மிகவும் கீழ் காணப்பட்டன. குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொவிட் – 19இன் துரிதமான பரவலின் காரணமாக அந்நாடுகளின் கொள்வனவாளர்களிடமிருந்து   தமது வழமையான உற்பத்திகளுக்கு தாம் கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என புடவை மற்றும் அணியும் ஆடைத் துறைகளிலுள்ள பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். மேலும், தொழில்நிலையில் வீழ்ச்சிக்கு சில அமைய/ தற்காலிக ஊழியர்கள் நிறுத்தப்பட்டமை முக்கிய காரணமாக அமைந்தது. உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளின் வீழ்ச்சிக்கேற்ப கொள்வனவுகளின் இருப்பும் குறைவடைந்தது.

- Advertisement -

முழு வடிவம்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீரற்ற வானிலை: 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு…!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில்...

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்…!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்னான, போபத்தெல்ல, வெலேகொட, அஸ்கஹுல மற்றும் யகுதாகொட...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது..!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 695 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியக்கொடை கொரோனா...

பசறையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

பசறையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இவர்கள் கொழும்பில் பணிபுரிபவர்களென்றும், பொங்கல் விடுமுறைக்காக கிராமத்திற்கு வருகைதந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தொற்றாளர்கள் கோணக்கலை...

மகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..!

மேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...

Developed by: SEOGlitz