இலங்கை கிரிகெட்அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்திய அணி தயாராக உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல்காரணமாக சர்வதேச ரீதியில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்துவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சர்வதேசகிரிக்கட் சம்மேளனத்தின் அட்டவணைக்கு அமைய ஜூலை மாதம் இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகள்மற்றும் 3 டி 20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் குறித்து எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில் இருந்தது இந்த நிலையில் இந்தியஅணி ஜூலை மாதம் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென, ஶ்ரீ லங்காகிரிக்கெட், இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய, கோரிக்கையைஏற்றுக்கொண்டு குறித்த போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளதாக இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டுசபை குறிப்பிட்டுள்ளது இருப்பினும், இந்தியஅரசின் வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.