நாட்டின் பல பகுதிகளிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்திலும், அந்தமானின் தென் கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டள தாழமுக்கம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கிழக்கு கடற்பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
நாட்டின் தெற்கு ,மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது,
அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு வேளைகளில் இடியுடன் மழை பெய்யும் சாத்திமுள்ளதாக தெரிவி்ககப்படுகின்றது.
மேல்மாகணம் மற்றும் தென் மாகாணத்தின் பல இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது,