மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலியா!

- Advertisement -

கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும், இலங்கை மக்களின் தேவைகளுக்கும் உதவியளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன் இலங்கைக்குதேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய ஆய்வுகூடங்கள்மற்றும் நோயாளிகளை பராமரிக்கக் கூடிய முறையை வலுப்படுத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள்,சுகாதார பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தரவுகளை சேகரிக்க கூடிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், நாட்டில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் ஏனைய குடும்பங்களுடைய சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான சுகாதார உபகரணங்களையும்அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz