இறுதியாக கொரோனா தொற்றுக்குள்ளான 25 பேரில் 23 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து 60 ஆக காணப்படுகின்றது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 520 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 431 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.