இராணுவத்தினரை கெளரவிக்கும் வகையில் 177 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதியினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பதவி உயர்த்தப்பட்டவர்களில் ஐந்து மேஜர் ஜெனரல்கள், நான்கு பிரிகேடியர்கள், 39 லெப்டினன்ட் கேர்ணல்கள், 69 மேஜர்கள் மற்றும் 60 லெப்டினன்ட்கள் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அண்மைக்காலத்தில் அதிக இராணுவ அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பணியாற்றிய நிலையில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் தற்போது காணி,சொத்துக்கள் மற்றும் படையினரின் குடியிருப்புக்கள் சபையின் பணிப்பாளராகவும் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டோ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.