மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய – அவுஸ்ரேலிய தொடர் : மைதானங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது அஸ்திரேலியா!

- Advertisement -

இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இடம்பெறும் மைதானங்கள் குறித்த விபரங்களை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்திருந்தது.

- Advertisement -

கொரேனா தொற்றுக் காரணமாக பல கிரிக்கெட் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிகளும் பிற்போடப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ளும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

பெர்த் மைதானம் தவிர்ந்த ஏனைய 4 மைதானங்களை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த டெஸ்ட் தொடர் டிசம்பர் 3 ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகின்றது.

இதன்படி டிசம்பர் 3-7 முதல் டெஸ்ட் போட்டிகள் – பிரிஸ்பன் மைதானம்

டிசம்பர் 11-15 -2வது டெஸ்ட் (பகலிரவு டெஸ்ட் போட்டிகள்) – அடிலெய்ட்

டிசம்பர் 26-30 -3வது டெஸ்ட் (பாக்சிங் டே மைதானம்) – மெல்போர்ன்

அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி 3-7 – 4வது இறுதி டெஸ்ட் போட்டி – சிட்னி ஆகிய இடங்களில் குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

எனினும் முன்னர் 4 டெஸ்ட் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...