இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மணித்தியாலங்கள் வரை இந்தியாவில் தொள்ளாயிரத்து 33 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றினால் இந்தியாவில் 3 ஆயிரத்து 156 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 ஆவது முறையாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.