மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் போட்டிகள் குறித்து அரசாங்கமே தீர்மானிக்கும் : விளையாட்டுத்துறை அமைச்சர்

- Advertisement -

இந்த ஆண்டிற்கான இந்திய பிரிமீயர் லீக் போட்டிகள் குறித்த இறுதித்தீர்மானம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையால் அல்ல இந்திய அரசாங்கத்தினால் மாத்திரமே எடுக்கப்படும் என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் (kiran rijju) கிரன் ரிஜ்ஜு இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு  எந்தவித  ஆபத்தும் இல்லாவிட்டால் மட்டுமே IPL கிரிக்கட் போட்டிகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவிருந்த IPL கிரிக்கட் போட்டிகள், கொரோனா தொற்று பரவல் சர்வதேச ரீதியில் அதிகரித்ததை அடுத்து கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதிக்குப் பின்னர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட  போட்டிகளை நடத்துவது மற்றும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பான முடிவுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  அறிவிக்கவுள்ளதாக BCCI இன் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்தே இந்திய விளையாட்டு துறை அமைச்சர் (kiran rijju) கிரன் ரிஜ்ஜு இந்திய பிரிமீயர் லீக் போட்டிகள் குறித்த இறுதித்தீர்மானம் இந்திய அரசாங்கத்தினால் மாத்திரமே எடுக்கப்படும் என தெர்வித்துள்ளார்.

மேலும் விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக  நாட்டின் ஆரோக்கியத்தை ஆபத்தில் வைக்க முடியாது என்றும் கிரன் ரிஜ்ஜு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz