மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிற்காக ஜி 7 மாநாட்டை ஒத்திவைத்தார் டிரம்ப்!

- Advertisement -

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

மேலும், அவுஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க தாம் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அமெரிக்காவில் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்துவதைவிட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில், தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதுள்ள ஜி-7 அமைப்பு மிகவும் காலாவதியான குழுவாக உள்ளது என்றும், பல நாடுகளுக்கும் இந்த காணொலி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில், சீனாவுடன் அதிகரித்துவரும் மோதல் மற்றும் உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு போன்றவற்றால் அமெரிக்கா அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஆதரவான இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை ஜி-7 குழுவில் இணைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz