இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக முடக்கசெயற்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு என்பன தளர்த்தப்பட்டன.
இந்த நிலையில் அண்மைக்காலமாக குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட நிலையில் உடன் அமுலாகும் வகையில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 497 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இந்தியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 869 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.