மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து போட்டி தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி!

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுவதற்கே மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேற்கிந்தியத்தீவுகள் அணி அடுத்த மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக இந்த போட்டித் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

தள்ளிபோடப்பட்ட குறித்த டெஸ்ட் போட்டித் தொடரை ஜூலை மாதத்தில் நடத்துவது குறித்து இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபைகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இரசிகர்கள் இன்றிய பூட்டிய மைதானத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்புக்கான உரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இந்த போட்டித் தொடரை நடத்தலாம் என இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் முடிவுக்கு வந்துள்ளன.

இங்கிலாந்து – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் சவுதம்டன் மற்றும் மான்செஸ்டரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

முதலாவது டெஸ்ட் ஜூலை 8ஆம் திகதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் திகதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 24ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில், போட்டித் தொடருக்கு முன்னர் வீரர்களைத் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் இந்த போட்டிக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்வரும் 8ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை கொள்கை ரீதியாக அனுமதி அளித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் மருத்துவம் மற்றும் கிரிக்கெட் தொடர்பான பிரதிநிதிகள், ஆலோசகர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதார ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz