மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆரோக்கியமே சிறந்த சொத்து – மகிழ்ச்சியே நீடித்த செல்வம் – விசேட அறிக்கை…!

- Advertisement -

ஆரோக்கியமே சிறந்த சொத்து – மகிழ்ச்சியே நீடித்த செல்வம்’ என்ற தொனிப் பொருளில் இந்த ஆண்டுக்கான வெசாக் தினம் கொண்டாடப்பட உள்ளது.

புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேசிய வெசாக் வைபவத்தை குறைந்த எண்ணிக்கையிலான அதிதிகளின் பங்களிப்புடன் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை, கோணபொல, ஒலபொடுவ ஜயவர்தனாராமய பூரண மகா விகாரையில் தேசிய வெசாக் வைபவம் இடம்பெற உள்ளதாகவும் புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 6ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 4 விசேட முத்திரைகள் வெளியிடப்பட உள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தமது வீடுகளில் பௌத்த கொடிகளை ஏற்றி, விளக்குகளை வரிசையாக வைத்து வெசாக் தினத்தை கொண்டாடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவட்டங்களுக்கிடையிலான இரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

வெளிமாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம்அலை ஏற்பட்டதன் காரணமாக அலுவலக ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. எனினும், தற்போது...

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

Developed by: SEOGlitz