ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான போர் நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்துள்ளனர்
இஸ்லாமியர்களின் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்றுமுதல் அமுலாகும் வகையில் தலிபான்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் அரசப் படைகளுக்கு தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக கடந்த சிலவாரங்களாக கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய இன்று முதல் மூன்று நாட்களுக்கு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூன்று நாள் போர் நிறுத்தமானது நாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் வன்முறையைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.