மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

- Advertisement -

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை காணி தொடர்பில் பிரச்சினை காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனத்தையும், பிரதேசவாசிகள் சிலரையும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்தபோதே பதட்ட  நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை கொண்டுசென்ற வாகனத்தை பிரதேச மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

எனினும் பொது மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து கைதான நபர்கள் விடுவிக்கப்பட்டதுடன், நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த காணி விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் உள்ள 400 குடும்பங்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவரால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமது வாழ்வாதார முன்னேற்றத்திற்கும், கிராமத்தின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் தமக்கான வயற்காணிகளை பெற்றுத்தரக்கூடியவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனையே தாங்கள் பார்க்கின்றோம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz