மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று!

- Advertisement -

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய நோர்வூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் இன்று மாலை 4 மணியளவில் இறுதிக்கிரிகைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்தும் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது, நாட்டின் அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பில் இருந்து ஹெலிகொப்டர் ஊடாக நேற்று முன்தினம் கம்பளை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கிருந்து இறம்பொடை வெவண்டன் இல்லத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதன்போது வெவண்டன் இல்லத்தில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் பலர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து பொது மக்கள் அஞ்சலிக்காக நேற்றைய தினம் வெவண்டன் இல்லத்தில் இருந்து தவலந்தன்னை, லபுக்கலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை ஊடாக கொட்டகலை CLF வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றைய தினம் பிற்பகல் 1.30க்கு கொட்டகலை CLF வளாகத்தில் இருந்து ஹட்டன் டிக்கோயா ஊடாக நோர்வூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை 4 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz