பொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும், கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பானது, அலரிமாளிகையில் எதிர்வரும் 4 ஆம் திகதி பிற்கபல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாட்டில் கொரோனா தெற்று காரணமாக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் நபர்கள் முகம்கொடுக்கும் சிக்கல் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் வகையில் இந்த சந்திப்பு அமைய உள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் இருந்து ஒவ்வாரு நாளும், அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாட கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்டுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலான திட்டங்களை வகுக்கும் வகையில் இந்த கலந்துரையாடல்களை அமையுமெடனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.