மெய்ப்பொருள் காண்பது அறிவு

அணிசேரா நாடுகளின் காணொளி மூலமான விசேட சந்திப்பு இன்று!

- Advertisement -

அணிசேரா நாடுகளின் காணொளி மூலமான விசேட சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

120 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா இயக்கம் 1961ஆம் ஆண்டு யூகோஸ்லாவியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

- Advertisement -

சக்திவாய்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்திருக்கும் நாடுகளின் கூட்டமைப்பாக அணிசேரா இயக்கம் கருதப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில், உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில், அணிசேரா இயக்கத்தின் காணொளி மூலமான விசேட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில், இலங்கை சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மாலை 6.15க்கு உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அணிசேரா இயக்கத்தின் 2019 – 2022 காலப்பகுதிக்கு தலைமை தாங்கும் அஸர்பைஜான் (Azerbaijan) ஜனாதிபதி, இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) குறித்த காணொளி மூலமான விசேட சந்திப்புக்கு தலைமை தாங்கவுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் 74ஆவது அமர்வுக்கான தலைவர் திஜ்ஜானி முஹம்மத் பாந்தே (Tijjani Muhammad-Bande), உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) மற்றும் ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் மவுஸ்ஸா ஃபாகி மஹமட் (Moussa Faki Mahamat) ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டொனியோ குட்டெரெஸ் (António Guterres) ஒளிப்பதிவு செய்யப்பட்ட தனது விசேட செய்தியை மாநாட்டுக்காக வழங்கவுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி (Arif Alvi), மலேஷிய பிரதமர் தான் ஶ்ரீ முஹியிதீன் யாஸின் (Tan Sri Muhyiddin Yassin) உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும், குறித்த காணொளி மூலமான விசேட சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

கம்பஹாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அவர்களில் 10 பேர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுகின்றவர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz