மேலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் வீதிகளில் அனாவசியமாக நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆகியவற்றில் பணிக்கு செல்வோர் மட்டுமே பயணிக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சேவைகளுக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் காணப்படுபவர்கள் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசியமான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்ய மாத்திரமே மக்கள் வெளியில் செல்ல முடியும் என்பதுடன், அவ்வாறான தேவைகளுக்காக தமது பிரதேசத்தில் உள்ள நடந்து செல்லும் தூரத்தில் உள்ள விற்பனை நிலையங்களை மாத்திரமே தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.