மெய்ப்பொருள் காண்பது அறிவு

T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு – சந்தேக நபரும் கைதானார்!

- Advertisement -

இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைதானார்.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கிழக்கு மாகாண  சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தனவின் கட்டளைக்கமைய    அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அயாஷ கருணாரத்தினவின் மேற்பார்வையில்      அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  எம்.ஜெயந்த ரத்னாயக்க நெறிப்படுத்தலில்  கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தரவின்  நேரடிக் கண்காணிப்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில்   சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கி சூடு இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள்(செவ்வாய்க்கிழமை(21)  26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய  ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் சந்தேக நபரை நாளை புதன்கிழமை(22)  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில்   ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு - சந்தேக நபரும் கைதானார்! 1

T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு - சந்தேக நபரும் கைதானார்! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz