மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை அவர்களது பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று

- Advertisement -

விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை அவர்களது பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், முப்படையினரின் அனைத்து விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி அவர்களை அழைத்துவருவதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், விடுமுறையில் உள்ள போக்குவரத்து வசதியை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் முப்படை வீரர்களும் அருகில் உள்ள முகாம்களைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதற்கான விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதன் மூலம், உரிய போக்குவரத்து வசதிகளை முப்படையினருக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விடுமுறையில் உள்ள அனைத்து கடற்படையினரையும் உடனடியாக அருகில் உள்ள முகாம்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இராணுவத் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த துமிந்த திஸாநாயக்க நடவடிக்கை!

நிலையானதும் புதுப்பிக்கத்தக்கதுமான எரிசக்தி உற்பத்திக்கான இலக்குகளை அடைய தேவையான கொள்கைகளை வகுப்பதே தமது முதன்மை இலக்காகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த...

20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் கருத்து!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL NEWS · 704577 20 ஆவது...

எழுத்து – வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட மணித்தியால அளவிலான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...

தபால் சேவையை பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்றலாம்: ஜனாதிபதி வலியுறுத்தல்!

இலங்கை தபால் சேவையை தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்ற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச தபால் சேவை தொடர்பில் கவனஞ் செலுத்தி, பரந்த அளவிலான சேவை வாய்ப்புகளை...

Developed by: SEOGlitz