சீதுவ இராணுவப் படை முகாம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சீதுவ இராணுவப் படைப்பிரிவின் அதிகாரிஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்தே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும்மேற்பட்ட இராணுவ வீரர்களும் தனிமைப்படுத்தடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குறித்த அதிகாரியின் மனைவி வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த பின்னணியிலேயே, இவருக்கும் தொற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது