மெய்ப்பொருள் காண்பது அறிவு

50 மி.மீக்கு மேல் கனமழை – அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை..!

- Advertisement -

மேல், சபராகமுவா, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தரை மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பேய்யும் சந்தர்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுமெனவும் தெரிவிக்கப்டப்டுள்ளது.

ஆகையினால், மரங்கள் முறிந்து வழுதல் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மண்சரிவு மற்றும் மண்மேடு இடிந்து வழுதல் உள்ளிட்ட அனர்த்தங்களில் இருந்தும் தம்மை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்!

நாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...

CSK அணி குறித்து வெளியான தகவல்!

சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

Developed by: SEOGlitz