மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொடரும் ஊரடங்கு – பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள தகவல்..

- Advertisement -

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்துக்குள் ஆயிரத்து 211 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் காலை 06 மணி முதல் இன்றைய தினம் காலை 06 மணி வரையான 24 மணி நேர காலப்பகுதிக்குள்ளேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

- Advertisement -

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 348 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன

இதற்கமைய, நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 06 மணி முதல் இன்றைய தினம் காலை 06 மணி வரையான காலப்பகுதியில் 38 ஆயிரத்து 566 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 09 ஆயிரத்து தொள்ளாயிரத்து 09 வாகங்கள் இதுவரை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்றும் தொடர்கின்றது.

எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நாளை முதல் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், குறித்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும்எ என தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற பகுதிகளில், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து வெளியில் செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1 அல்லது 2 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் நாளை திங்கட் கிழமை அத்தியாவசிய பொருள் கொள்வனவில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், 3 அல்லது 4 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் செவ்வாய்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

அத்துடன், 5 அல்லது 6 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் புதன்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

அத்துடன், 7 அல்லது 8 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.

அத்துடன், 9 அல்லது 0 ஆகிய இலக்கங்களில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz