மெய்ப்பொருள் காண்பது அறிவு

லிந்துலை நாகசேனை ஆர்ப்பாட்டம் இடைநிறுத்தம்!

- Advertisement -

நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நாகசேனை பகுதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த ஆர்ப்பாட்டம்  இடைநிறுத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

லிந்துலை வளஹா தோட்டம் மற்றும் அதனை அண்டியுள்ள தோட்ட மக்களுக்கு  வழங்கப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபா கொடுப்பனசில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே நேற்று மாலை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில்  வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு எந்தவிதமான உதவித் தொகையும் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த குறித்த பகுதிக்கு நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சமூர்த்தி ஆணையாளர் ஆகியோர் வருகைதந்துள்ளனர்.

இந்த நிலையில், கொடுப்பனவு கிடைக்காதவர்கள் மாத்திரம் தமது விண்ணப்பங்களை அரச அதிகாரிகளிடம் சமர்ப்பித்து நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளனர்.

அத்துடன், மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் எவரும் இந்தப் பிரச்சினையில் தலையீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை முறையாக உரியவர்களுக்கு கிடைக்காத நிலையில் தமக்கு அறிவிக்குமாறும்  நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சமூர்த்தி ஆணையாளர் ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz