மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – 800 மேற்பட்டோர் உயிரிழப்பு..!

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கமைய, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 825 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 26 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

இதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் இந்தியா முழுவதும் ஆயிரத்து 836 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளிலேயே அதிகளவானவர்கள் கொரோனா வைரஸ் தாக்கதிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிறிய வியாபார நிலையங்களை திறப்பதற்கு இந்திய அரசாங்க அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், கொரோனா அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என  தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அரச நிறுவனங்களில் 50 வீதமானவர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் எனவும் இந்திய அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதேவேளை, இவ்வாறு கடமையாற்றுபவர்கள் தொடர்ந்து சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz