மெய்ப்பொருள் காண்பது அறிவு

அங்கஜன் ராமநாதன் தலையீட்டால் யாழ் கர்ப்பிணிப்பெண்களுக்கு நிவாரணம்

- Advertisement -

யாழ் மாவட்டத்தின் அரச துறையில் பணிபுரியும் கர்ப்பணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மாரை வேலைக்கு  அழைப்பதை மே மாதம் இறுதிவரை இயன்றளவு தவிர்க்க வேண்டும்  என உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் அத்தியவசிய சேவைகளுக்காக அவர்களை பணிக்கு அழைப்பதாக இருப்பின் அருகிலுள்ள பணித் தளத்தில் அவர்களை பணிபுரிய அனுமதிக்க வேண்டுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் வழிகாட்டலில்  வௌியாகியுள்ள  சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

- Advertisement -

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்ஜன் ராமநாதன் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் முன்வைத்த  வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

தமக்கு அருகிலுள்ள அலுவலகங்களில் பணிபுரிய விரும்பும் கர்ப்பிணித் தாய்மார் அது தொடர்பில் தமது திணைக்களத்தின் பிரதானிகளுக்கு எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது,

அவர்கள் தமக்கு அருகிலுள்ள அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் அதற்கான ஊதியம் அவர்களின் நிரந்தர அலுவலகத்தினாலேயே செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு  தெரிவித்துள்ளது.,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி தாய்லாந்தில் போராட்டம்

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டுமெனக் கோரி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு  போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz