ஊரடங்கு சட்ட விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு மீண்டும் அழைத்துவருவதற்காக நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் நாளை காலை ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு மீண்டும் அழைத்துவருவதற்காக அந்த ஊரடங்கு நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் நாளை மறுதினம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.