மெய்ப்பொருள் காண்பது அறிவு

களுத்துறை சிறைச்சாலை சிறைக்கைதிகள் 65 பேர் கண்டி போகம்பரை சிறைக்கு மாற்றம்

- Advertisement -

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் 65 பேர் கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 65 பெண்களே இவ்வாறு போகாம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

களுத்துறை சிறைச்சாலையில் போதிய இடவசதி இன்மையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி செயற்படுகின்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை தடுத்துவைப்பதற்கு இடவசதி பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கழிவுகள் சேகரிப்பு வாரம்: மத்திய சுற்றுசூழல் அதிகாரசபை பிரகடனம்!

நாடளாவிய ரீதியில் இலத்திரணியல் உபகரண கழிவுகளை சேகரிப்பதற்கான வாரமொன்றை மத்திய சுற்றுசூழல் அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் 10 ஆம் திகதிவரை இலத்திரணியல் உபகரண கழிவுகளை சேகரிப்பதற்கான வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த துமிந்த திஸாநாயக்க நடவடிக்கை!

நிலையானதும் புதுப்பிக்கத்தக்கதுமான எரிசக்தி உற்பத்திக்கான இலக்குகளை அடைய தேவையான கொள்கைகளை வகுப்பதே தமது முதன்மை இலக்காகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த...

20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் கருத்து!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL NEWS · 704577 20 ஆவது...

எழுத்து – வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட மணித்தியால அளவிலான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...

Developed by: SEOGlitz