மெய்ப்பொருள் காண்பது அறிவு

27 ஆயிரம் இலங்கைப் பிரஜைகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை…!

- Advertisement -

வெளிநாடுகளில் உள்ள சுமார் 27 ஆயிரம் இலங்கைப் பிரஜைகள், நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான வசதிகள் குறைவாக உள்ள போதிலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவருவது தொடர்பில் அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட
‘Contact Sri Lanka’ என்ற தளத்தின் ஊடாக சுமார் 27 ஆயிரம் இலங்கைப் பிரஜைகள், நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இவர்களில் 17 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களும், ஆறாயிரம் மாணவர்களும் மற்றும் சுமார் மூவாயிரம் குறுகிய கால வீசாவில் பயணித்தவர்களும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தெற்காசிய நாடுகளுக்கு அரசாங்கத்தினால் பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்ட மாணவர்கள் தொடர்பிலேயே, அரசாங்கம் தற்போது அதிக கவனஞ் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு வர முடியாத நிலையில் இந்தியாவின் கோயம்புத்தூர் பகுதியில் நிர்க்கத்திக்குள்ளாகியுள்ள 113 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL- 1194 விமானத்தின் ஊடாக இன்று மதியம் 12.05 அளவில் அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

20 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

எதிர்க் கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் அமளி துமளிகளுக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், சஜித்...

Developed by: SEOGlitz