மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸார் சட்டத்திற்கு இணங்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

- Advertisement -

சமூக ஊடகங்ளில் தவறான செய்திகளை வெளியிடுகின்ற நபர்களை கைது செய்யும் போது, சட்டத்திற்கு இணங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரைக் கோரியுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமத்னவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

கொரோனா தொடர்பான போலித் தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்கள், அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்ட்டதை தாம் அவதானித்து வருவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எனினும், ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பிற உரிமைகளை மட்டுப்படுத்த எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும், அவசர காலங்களிலும்,  சட்டத்தின் கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்,  பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை மீளாய்வு செய்து, நாட்டில் சுமுகமான நிலைமையொன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

இதேவேளை, சுகாதாரத் தரப்பினருக்கு ஆதரவாக பொலிஸ் திணைக்களம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராட்டுத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

எஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்!

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.

Developed by: SEOGlitz