2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளது.
இதன்படி மாணவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய தளத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
https://doenets.lk என்ற இணையத்திற்கு பிரவேசியுங்கள்.
கடந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு, பாடசாலை ரீதியாக நான்கு லட்சத்து 33 ஆயிரத்து 189 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அத்துடன், தனிப்பட்ட ரீதியில் இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 57 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
இதற்கமைய, 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைகள், நான்காயிரத்து தொள்ளாயிரத்து 89 மத்திய நிலையங்களில் இடம்பெற்றதுடன், மொத்தமான ஏழு லட்சத்து 17 ஆயிரத்து 246 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது