மெய்ப்பொருள் காண்பது அறிவு

எச்சரிக்கை விடுக்கும் சுகாதார ஸ்தாபனம்

- Advertisement -

கொரோனா வைரஸ்  தொடர்பாக சர்வதேச நாடுகள் சிலவற்றினால் வழங்கப்படும் அபாயமற்ற சான்றிதலுக்கு எதிராக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பார்கள் வாய்ப்பு இல்லை என அறிவுறுத்தியுள்ளது.

- Advertisement -

இதேவேளை, இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதற்கான எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச நாடுகள் பல கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களுக்கு அபாயமற்ற சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன.

இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிப்பு!

வடக்கு - கிழக்கின் சில பகுதிகளில் நேற்றையதினம் ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில் வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளன. இதற்கமைய, பொலிசார் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, பாடசாலைக்கு சமூகமளித்த...

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

Developed by: SEOGlitz