பேலியகொடை மத்திய மீன்சந்தை வர்த்தகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை மத்திய மீன்சந்தை வர்த்தகள் 529 பேர் நேற்று PC R பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிலியந்தலை பகுதியில் மேறகொள்ளப்பட்ட PC R பரிசோதனை நடவடிக்கைகளின் பிரகாரம் மீன் விற்பனையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்பு கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PC R பரிசோதனை நடவடிக்கைகளின் பிரகாரம் மற்றுமொருவர் கொரோனா தொற்றுக்குள்ளான கண்டறியப்பட்டதாக பிலியந்தலை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபரின் தாயாருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.