மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கும் பிரேசில் ஜனாதிபதி?

- Advertisement -

பிரேசிலில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அந்த நாட்டு ஜனாதிபதி Jair Bolsonaro ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அவரும் முகக் கவசம் இன்றி பாதுகாப்பற்ற முறையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

பிரேசில் ஆளுனர்களின் வலியுறுத்தலின் பிரகாரம் முடக்குதல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த நாட்டு ஜனாதிபதி Bolsonaro ஆளுனர்களுடன் முரண்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, பிரேசில் இராணுவத் தலைமையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், அந்த நாட்டு ஜனாதிபதியும் கலந்து கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அந்த நாட்டு சட்டமன்றமான தேசிய காங்கிரஸ் மற்றும் உயர் நீதிமன்றத்தையும் மூட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...