மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹட்டன் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் விசேட அறிவிப்பு!

- Advertisement -

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை ஹட்டன் பொலிஸார் நேற்றும் இன்றும் முன்னெடுத்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் இலகுப்படுத்தப்பட்டது.

- Advertisement -

இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களைத்தவிர ஏனைய 21 மாவட்டங்களிலும் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 15 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுவந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இதன்படி அட்டன் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் வீதிகளில் நடமாடியவர்களையும், வாகனங்களை செலுத்தியவர்களையும் அட்டன் போக்குவரத்து பொலிஸார் கைது செய்தனர். மேலும் சிலர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஊரடங்குவேளையில் பயணிக்ககூடிய அனுமதி பத்திரமின்றி அட்டன் நகரில் வாகனம் செலுத்திய ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஆட்டோ ஓட்டிய சிலரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

Developed by: SEOGlitz