வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெலிசறை இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மகாகச்சகொடி கடற்படை வீரர் ஒருவருக்கு , கொரேனா தொற்று உள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, குறித்த கடற்படை வீரர் விடுமுறையில் வந்திருந்த நிலையில் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே, மாவட்ட அராசாங்க அதிபரின் உத்தரவுடன், வவுனியா நகரில் இன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
வவுனியாவில் இன்று அதிகாலை முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா நகரசபை , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் வவுனியா விசேட அதிரடிப்படை ஆகிய தரப்புகள் இணைந்து, கிருமி ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது