மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் முகாம்?

- Advertisement -

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்பகுதிக்கு விடுமுறைக்கு சென்ற நிலையில், யாழ்ப்பாணத்துக்கு திரும்பும் படையினரை தனிமைப்படுத்த, யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இதற்காக இரண்டு விடுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 45 பேர் இன்று மாலை அழைத்து வரப்பட உள்ளனர்.

 

இவர்கள் அனைவரையும் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுடைய நபர்களை அழைத்து வரவில்லை எனவும், விடுமுறையில் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை இது என்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz