மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் திருட்டு கும்பல் போலீசாரிடம் சிக்கினார்கள்!

- Advertisement -
யாழ்.நகரப்பகுதிகளில் 10 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை களவெடுத்த திருடர்களையும் திருடிய பொருட்களை வாங்கிய நபர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டிடம் நிர்மாணிக்கும் இடத்தில் இருந்து, கட்டிட பொருட்கள் மற்றும், ரில்டர் உள்ளிட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடி விற்பனை செய்தவர்களும், யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் திருடி விற்பனை செய்துள்ளார்கள்.
இவ்வாறு 3 இடங்களில் திருடிய இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணி செய்யும் இலத்திரனியல் பொருட்கள், என்பன திருடிய யாழ்.நாவாந்துறை மற்றும் பொம்மைவெளி, கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த சுமார் 8 பேர் ஏப்ரில் 26 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான, யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறு குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரி எம்.எம்.ஆர்.சி. முனசிங்க மற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்களான ஹர்சன், ஹபுலியட்ட, கவியரசன், ரஞ்சித், கிங்ஸ்லி, மற்றும் மரியசிறி, உபாலி, ரட்ணாயக்க,சுரேகா உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும், யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரின் சொத்துக்கள் முடக்கம்!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) இன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். அலெக்ஸி நவால்னியின் வங்கிக் கணக்குகள் மற்றும் மொஸ்கோவில் அமைந்துள்ள அவருக்குச் சொந்தமான குடியிருப்புத் தொகுதி என்பன...

எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து கமல் வெளியிட்டுள்ள தகவல்!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினது உடல்நிலையில் சற்றுப்பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினது உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு வைத்தியசாலைக்கு  நடிகர் கமல்ஹாசன் சென்றிருந்தார். இந்நிலையிலேயே எஸ்.பி.பி...

சிறுவர்களுக்கான சட்டத்திருத்தங்கள் தொடர்பாக இலங்கைக்கு ஐ.நா பாராட்டு!

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததன் ஊடாக, கட்டாயக் கல்விக்கான...

ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை!

மாத்தறையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு...

Developed by: SEOGlitz