ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் குடாகம ருவன்புற பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் ஒருவரை ஹட்டன் குற்றதடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் குற்றதடுப்பு பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றதாகவும் கசிப்பு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட உபகரனங்களையும் மீட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பிரிவினர் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது