மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகைக்காலம் நீடிப்பு!

- Advertisement -

போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடன் இந்த சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஊரடங்குச் சட்டம்  காரணமாக பெரும்பாளான தபாலகங்கள் திறக்கப்படாததால் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர்  குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னரான காலப்பகுதியில் விதிக்கப்படும் போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப் பணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள  சலுகைக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குரிய தண்டப் பணத்தை மாத்திரம் மேலதிக கட்டணங்கள் இன்றி  செலுத்த முடியுமெனவும் தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி  வரையான காலப்பகுதியில் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்துவதற்கான காலம் மே மாதம் 02ஆம் திகதி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபராத  தொகையை  மேலதிக கட்டணத்துடன் செலுத்த வேண்டுமெனவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..!

13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க அனுமதி!

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,  ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக C.A.சந்திரபிரேம, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை...

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

Developed by: SEOGlitz