மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸாரின் விசேட அறிவிப்பு…!

- Advertisement -

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள  நிலையில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியகுற்றச்சாட்டில்  கடந்த 24 மணிநேரத்தில்   650 க்கும்  மேற்பட்டவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  சுமார்  165 வாகனங்கள் பொலிஸாரின்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் காலை 6 மணி முதல் இன்றையதினம் காலை 6 மணி வரையான 24 மணி நேரகாலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த கைது  நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக  பொலிஸ்ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளைஊரடங்கு   சட்டம்  தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில்  சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன  இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz