புறக்கோட்டை மெனிங் சந்தை நாளை முதல் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்படவுள்ளது.
புறக்கோட்டை மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்கவை சுட்டிக்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஞாயிற்றுக் கிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் அதிகாலை 04 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை புறக்கோட்டை மெனிங் சந்தையை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, ஞாயிற்றுக் கிழமைகளில் புறக்கோட்டை மெனிங் சந்தை பகுதியில் கிருமி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன், புறக்கோட்டை மெனிங் சந்தைக்கு வருகைத்தருபவர்கள் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.