- Advertisement -
யாழ் மாநகர சபையின் அமர்வு இன்றையதினம் மாநகர சபையின் பிரதி முதல்வர் து. ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
வழமையாக மாநகர சபை அமர்வு நடைபெறும் மாநகர சமையில் உள்ள சபை மண்டபம் சமூக இடைவெளியை பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்றைய அமர்பு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ் மாநகர சபை முதல்வர் இல்லாத காரணத்தால், முடிவுகள் எதுவும் நடைமுறை படுத்த முடியாது என்று கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாரம் இல்லாத குறித்த கூட்டத்தில் தாங்கள் இருக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
யாழ் மாநகர சபை முதல்வர் பிரதி முதல்வரிடம் சபை கூட்டத்தை நாதாத்துமாறு ஒரு கடிதம் மூலம் தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.
பெரும்பாலான உறுப்பினர்களின் வெளிநடப்பை அடுத்து மாநகர சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மே 21 இடம்பெறும் என பிரதி முதல்வர் து.ஈசன் அறிவித்ததை அடுத்து இன்றைய அமர்வு நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -