பாகிஸ்தானில் உயர்க் கல்விக்காக சென்றிருந்த இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட விமமொனமொன்று இன்று புறப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் 113 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த மாணவர்களை அழைத்து வருவதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL – 1205 விமானம் இன்று காலை 7.40 அளவில் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் நோக்கி சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், விமானத்தில் விமானிகள் உட்பட 17 பேர் அடங்கிய பணியாளர் குழுவொன்றும் சென்றுள்ளது
இதன்பின்னர், குறித்த விமானம் லாகுர் விமான நிலையத்தை சென்றடைந்து மாணவர்களை அழைத்துவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விமானம் இன்று இரவு 7.45 அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.