மெய்ப்பொருள் காண்பது அறிவு

பண்டாரநாயக்க மாவத்தையில் மேலும் பலருக்கு கொரோனா…! சுகாதார அமைச்சு தகவல்.

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறித்த ஐந்து பேரும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், , நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 107 இதுவரை முற்றாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 173 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் 91 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 36 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 20 பேரும், இரணவில வைத்தியசாலையில் 18 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 44 பேரும் கொரோனா தொற்று காரணமாக இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 120 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 58 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 33 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 119 பேர் இதுவரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வெளியில் 405 பேர் இதுவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டவர்களில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz