மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்று – முழுமையான விபரம்

- Advertisement -

நாட்டில் இன்று மாத்திரம் 11 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன் மேலும் 2 பேர்கொரோனா தொற்றில் இருந்து இன்று குணமடைந்துள்ளதாகவும் தேசியதொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாதொற்றுக்குள்ளாகி இதுவரை 120 பேர் குணமடைந்துள்ளதுடன்,344 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுகுறித்த சந்தேகத்தின் பேரில் 273 பேர் கண்காணிப்பில்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மேலும், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 121 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில்58 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 80 பேரும், இரணவில வைத்தியசாலையில்19 பேரும், காத்தான்குடிஆதார வைத்தியசாலையில் 55 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் கொரோனாதொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதன்படி, கொழும்பு மாவட்டத்தில்154 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 59 பேரும்கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 37 பேரும், கம்பஹாமாவட்டத்தில் 34 பேரும்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில்இருந்த 41 பேரும்,வெலிசறை கடற்படை முகாமில் இருந்த 68 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz