நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ராணுவத்தினர் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எண்பது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் எண்பது பேர் ஆகியோருக்கு பதிலாக தற்போது ராணுத்தினர் இணைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாதொற்றை கட்டுப்படுததுவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரைஅங்கிருந்து விடுவித்து அதற்கு பதிலாக ராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துமாறு நாடாளுமன்ற படைக்கள சேவிதரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.