மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய உதயனிடம்  100 கோடி இழப்பீடு கோருகிறார் அங்ஜன்

- Advertisement -

தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய உதயனிடம்  100 கோடி இழப்பீடு கோருகிறார் அங்ஜன் 1

தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான  அங்கஜன் ராமநாதன்  உதயன் பத்திரிகை மீது 100 கோடி ரூபா இழப்பீடு கோரி தமது சட்டத்தரணியூடாக அறிவித்தல் அனுப்பியுள்ளார்,

- Advertisement -

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மீது  உண்மைக்கு புறம்பான செய்தியினை வௌியிட்டமை தொடர்பிலேயே இந்த  இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகையின் உரிமையாளர் தேர்தலில் ஒரு வேட்பாளராக களமிறங்கும் நிலையில் எதிர்த்தரப்பு வேட்பாளராக அங்கஜன் ராமாநான் உள்ளமையினால்  அவருக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டு கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

அந்த பத்திரிகையின் செய்திகளை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு திட்டமிட்ட வகையில் குறித்த பத்திரிகையின் உரிமையாளர் செயற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உதயன் பத்திரிகை எவ்வித ஆதாரமுமின்றி  அடிப்படையின்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை வௌியிட்டு தேர்தலுக்கான கபட நோக்கத்தில் அவதூறு ஏற்படுத்துவதாக  அந்த இழப்பீட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

எனவே இந்த  தேர்தல் காலப்பகுதியை பயன்படுத்தி தமது கட்சிக்காரருக்கு வௌிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படுத்துவதே குறித்த பத்திரிகை பிரசுரித்த செய்தியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளதாக  அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காரணங்களால்  குறித்த பத்திரிகை மீது நட்டஈடு வழக்குத் தொடர வழக்கெழு காரணம் எழுந்துள்ளதாக அங்கஜன் ராமநாதனின் சட்டத்தரணி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது,

மேலும் 14 நாட்களிற்குள்  தமது கட்சிக்காரருக்கு 100 கோடி ரூபா  நட்டஈடு வழங்கத் தவறும் பட்சத்தில் குறித்த பத்திரிகையின் உரிமையாளர் மீது சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக அங்கஜன் ராமநாதனின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் தமது கட்சிக்காரருக்கு எதிராக கூற்றுக்களையோ  அல்லது அவதூறு கருத்துக்களையோ கூறக்கூடாது என மேலதிக கோரிக்கையும் அந்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்கதட்டத்தக்கது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேசிய அடையாள அட்டைகள் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையமூடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு குறித்த செயற்திட்டம் பயனுள்ளதாக...

லிங்குசாமியுடன் இணைந்து அசத்தப்போகும் தெலுங்கு நடிகை..!

தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, பையா படங்களை இயக்கிய லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் இளம் நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி,...

இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐம்மு காஷ்மீர் லடாக் எல்லைப்பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட...

சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் பலி..!

சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் சோமாலிய தலைநகர் மொகாடிசு  நகரில் உள்ள உணவகம்  ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் மீறல் – 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை  3 ஆயிரத்து 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட...

Developed by: SEOGlitz